Monday, August 10, 2009

தீட்ஷை


Subject: தீட்ஷை
தீட்ஷை என்பது ஒரு சக்திப்பாதை. மூளையை மாற்றி அமைக்கும் ஒர நடைமுறை. பழங்காலங்களிலும் இந்த புராதன நுணுக்கம் புழக்கத்தில் இருந்தது. மூளையில், அன்பு, அதிகமான அறிவுக்கூர்மை, பேரானந்தம் மற்றும் இறை அருளிற்கு சம்பந்தப்பட்டிருக்கும் பல்வேறு மையங்கள் இன்று செயலிழந்து இருக்கின்றன. இவற்றை தீக்ஷை சக்தியின் மூலம் தூண்டி உயிர்த்தெழவைத்து பயம், பொறாமை, தாழ்வுமனப்பான்மை, மற்றும் வெறும் பகற்கனவுகளைக் காணச்செய்யும் மற்ற மையங்களை செயலிழக்கச் செய்யமுடியும்.

தீட்ஷை என்பது மதமாற்றம் அன்று எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி அம்மா பஹவானால் வழங்கப்படும் தீட்சையின் சிறப்பு அவர்களின் தெய்வீக சக்தியை நேரடியாக நம்முள் நிறையச் செய்கின்றது. தீட்சை என்பது "சக்தி மயமான மார்க்கம்" ஜாதி மத குல, ஆசார பேதமின்றி அனைவருமே பெற்றுக் கொள்ளலாம் ஏனெனில் இவை உங்களின் நம்பிக்கையோ தியானப்பயிற்சிகளையோ ஆதாரப்பட்டது அல்ல.

இந்த தீட்ஷை சக்தியின் மூலம் மனச்சஞ்சலங்கள் நீங்கி ஆனந்தம் கூடிய அன்பு நிலையை அடைவீர்கள், இணையற்ற இறை சக்தி உங்களுக்குள் நிரம்பும், இதனால் உடலை வாட்டும் பிணிகள் விலகுவது மட்டுமல்லாது பல அதிசய அற்புதங்களை அனுபவிப்பீர்கள் இதயத்தில் அன்பு, கருணை, நன்றியுணர்வு மலரும், சிலருக்கு தெய்வீக காட்சிகள் பூர்வ ஜென்ம நினைவு கூறல் போன்ற விபரிக்கமுடியாத உன்னத காட்சிகள் அல்ல செய்திகள் ஆன்மீக அனுபவங்கள் போன்றவையும் கிடைக்கும். இத்தகைய அபூர்வசக்தி வாய்ந்தது தீட்சாசக்தி.
--------------------

No comments:

Post a Comment

Amma Bhagavan's Songs