கொழும்பு வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.
அன்னை மரியின் உருவப் படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளதை இந்தப் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.
வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியில் உள்ள கணேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.
கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ஆம் திகதி மாலை 3 மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர்.
2006 ஆம் ஆண்டளவில் புனித மடு தேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
ஆணைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது
Source virakesar